தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- சீரகம்
- மிளகு
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- கடுகு
- எண்ணெய்
செய்முறை
ஒரு தக்காளி, சிறிதளவு புளி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள தக்காளி மற்றும் புளியை கரைத்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சேர்க்கவும். நான்கு பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் தட்டி சேர்க்கவும். மேலும், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
