வேர்க்கடலை தட்டு வடை

தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை
  • அரிசி மாவு
  • கடலை மாவு
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • எள்
  • நல்லெண்ணெய்

செய்முறை

100 கிராம் வேர்க்கடலையை தோலை நீக்கி ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் 50 கிராம் கடலை மாவு, 50 கிராம் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் எள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து மெல்லிசாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post