தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- சின்ன வெங்காயம்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- சோம்பு
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- தேங்காய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கப் தோல் சீவி பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பின், இரண்டு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் அரைக்கவும்.
மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன், வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
