தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- உளுந்து பருப்பு
- சீரகம்
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- இஞ்சி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
ஒரு கப் தட்டைப்பயிறு, 1/4 கப் உளுந்து பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், இரண்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நான்கு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
