தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- கடலை மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் தட்டைப்பயிறை 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன், 1/4 கப் கடலை மாவு, 1/2 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
