தேவையான பொருட்கள்
- தட்டைப்பயிறு
- கத்திரிக்காய்
- புளி
- தக்காளி
- சாம்பார் பொடி
- மிளகாய் தூள்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- சின்ன வெங்காயம்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் தட்டைப்பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன், 1/2 கப் கத்திரிக்காய், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1/2 கப் புளிக்கரைசல், வேக வைத்துள்ள தட்டைப்பயிறு, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
