தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை
- அரிசி மாவு
- மைதா
- எள்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
1/2 கப் பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன், 1/4 கப் மைதா, 1/4 கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் எள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து மெல்லிசாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
