பொட்டுக்கடலை சட்னி

தேவையான பொருட்கள்

  • பொட்டுக்கடலை
  • தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

1/2 கப் பொட்டுக்கடலை, 1/4 கப் துருவிய தேங்காய், நான்கு காய்ந்த மிளகாய், இரண்டு பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின், கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

Previous Post Next Post