உருளைக்கிழங்கு தோசை

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • தோசை மாவு
  • பெரிய வெங்காயம்
  • சீரகம்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

200 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன், ஒரு கப் தோசை மாவு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு, ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து விடவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post