தேவையான பொருட்கள்
- தினை அரிசி
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- ஜவ்வரிசி
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் தோல் நீக்கிய தினை அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், அரைத்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 மணி நேரம் வைக்கவும்.
தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
