வெள்ளை பூசணிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்

  • வெள்ளை பூசணிக்காய்
  • தக்காளி
  • புளி
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய், ஒரு கப் துருவிய பூசணிக்காய், ஒரு தக்காளி, சிறிதளவு புளி, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும்.

ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post