தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- புளி
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
செய்முறை
இரண்டு பெரிய கத்திரிக்காயை அடுப்பில் காட்டி சுட்டு எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.
பின், கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு தக்காளி, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு புளி, சுட்டு வைத்துள்ள கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
