பச்சை பயிறு சுண்டல்

தேவையான பொருட்கள்

  • பச்சை பயிறு
  • பெரிய வெங்காயம்
  • தேங்காய்
  • பச்சை மிளகாய்
  • சீரகம்
  • கடுகு
  • கடலைப்பருப்பு
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

முதலில், ஒரு கப் பச்சை பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், வேக வைத்துள்ள பச்சை பயிறு, 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.


Previous Post Next Post