தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- கோதுமை மாவு
- மைதா
- ரவை
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- மிளகாய் தூள்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- உப்பு
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 200 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின், இரண்டு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, நான்கு பல் பூண்டு, ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து விடவும்.
மேலும், இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, இரண்டு ஸ்பூன் ரவை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
