கருப்பட்டி பால்கோவா

தேவையான பொருட்கள்

  • பால்
  • கருப்பட்டி
  • நெய்
  • ஏலக்காய் பொடி
  • எலுமிச்சை சாறு

செய்முறை

ஒரு அடிகனமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து பால் சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும். பின், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரிந்து வந்த உடன் ஒரு துணியில் ஊற்றி தண்ணீரை பிரித்து எடுத்து விடவும்.

பின்னர், கடாயில், 1/2 கப் பொடியாக்கிய கருப்பட்டி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கருப்பட்டி உருக்கிய பின் திரிந்த பால், இரண்டு ஸ்பூன் நெய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும்.

ஆறிய பின், தேவைக்கேற்ப சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டிக் கொள்ளவும்.

Previous Post Next Post