புடலங்காய் விதை சட்னி

தேவையான பொருட்கள்

  • புடலங்காய் விதை
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • பூண்டு
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • தக்காளி
  • புளி
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு புடலங்காயை நறுக்கி அதன் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

பின், கடாயில் 1/2 கப் புடலங்காய் விதை மற்றும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், அதே கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், ஐந்து பல் பூண்டு, ஒரு சிறிய தக்காளி, சிறிதளவு புளி சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

இறுதியாக, இவற்றை ஒன்றாக சேர்த்து இதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post