தேவையான பொருட்கள்
- கம்பு
- பொட்டுக்கடலை
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு கப் கம்பு மற்றும் 1/2 கப் பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், இரண்டு கப் நாட்டுச் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
