தேவையான பொருட்கள்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- மிளகுத்தூள்
- கறிவேப்பிலை
- உப்பு
- கடுகு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஆறு முட்டையை உடைத்து சேர்க்கவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து பொடிந்து வரும் வரை கலந்து விட்டு பின் இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
