மசாலா முட்டை பொடிமாஸ்


தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மீன் சில்லி பொடி
  • மிளகுத்தூள்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், நான்கு ஸ்பூன் மீன் சில்லி பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

ஆறு முட்டையை உடைத்து இதனுடன் சேர்க்கவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து பொடிந்து வரும் வரை கலந்து விடவும்.

Previous Post Next Post