தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- கடலை மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- சமையல் சோடா
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவு, 1/2 கப் கடலை மாவு, 1 1/2 கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கும்.
