தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- கடலை மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் கடலை மாவு, 1 1/2 கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்த தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
