தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- அரிசி மாவு
- பொட்டுக்கடலை
- நல்லெண்ணெய்
- எண்ணெய்
- உப்பு
- சீரகம்
செய்முறை
ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/4 கப்- க்கு குறைவாக பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு, 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து மெல்லிசாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
