உளுந்து பருப்பு சட்னி

தேவையான பொருட்கள்

  • உளுந்து பருப்பு
  • சின்ன வெங்காயம்
  • பூண்டு
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • புளி
  • உப்பு
  • தேங்காய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

கடாயில், ஒரு கைப்பிடி உளுந்து பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், பத்து பல் பூண்டு, ஒரு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு புளி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் மேலும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

வதங்கிய பின், வறுத்து வைத்துள்ள உளுந்து பருப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இறுதியாக, 1/4 கப் துருவிய தேங்காய், 1/4 கப் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post