தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- மைதா
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- மிளகுத்தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு, ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடங்கள் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
