பாசிப்பருப்பு சட்னி

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • சீரகம்
  • தேங்காய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், 1/4 கப் பாசிப்பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் மேலும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

வதங்கிய பின், வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு, 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 கப் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஆறிய பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post