ராகி ரொட்டி

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • மைதா
  • பெரிய வெங்காயம்
  • சோம்பு
  • காய்ந்த மிளகாய்
  • பொட்டுக்கடலை
  • மிளகாய் தூள்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் மைதா, ஒரு கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் உடைத்த பொட்டுக்கடலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.

பின், ஒரு வாழை இலையில் வைத்து தட்டி தோசை கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post