தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- நாட்டுச் சர்க்கரை
- முந்திரி பருப்பு
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவு, 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 50 கிராம் முந்திரி பருப்பு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து இளக்கமாக பிசைத்துக் கொள்ளவும்.
பின், வாழை இலையில் சிறிதளவு மாவை எடுத்து வைத்து தட்டி தோசை கல்லில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
