தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- மைதா
- பொட்டுக்கடலை
- கருப்பட்டி
- நெய்
செய்முறை
ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் மைதா, 1/4 கப் உடைத்த பொட்டுக்கடலை, 1/2 கப் பொடியாக்கிய கருப்பட்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின், வாழை இலையில் வைத்து தட்டி தோசை கல்லில் போட்டு தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
