தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- கேரட்
- கடலை மாவு
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/2 கப் துருவிய கேரட், 1/2 கப் துருவிய பீட்ரூட், 1/2 கப் பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
