தேவையான பொருட்கள்
- கொள்ளு பருப்பு
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை
- மிளகுத்தூள்
- கொத்தமல்லி இலை
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
குக்கரில், நான்கு ஸ்பூன் எண்ணெய், நான்கு பல் பொடியாக நறுக்கிய பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனுடன், 1/4 கப் கொள்ளு பருப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
பின், மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
