தேங்காய் பால் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி
  • தேங்காய் பால்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • பிரியாணி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • இஞ்சி
  • பூண்டு
  • சோம்பு
  • சின்ன வெங்காயம்
  • பட்டை
  • ஏலக்காய்
  • உப்பு
  • நெய்
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், பத்து பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, இரண்டு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஏலக்காய், தட்டி வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன், 1/4 கப் சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஐந்து தக்காளி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், இரண்டு டம்ளர் அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். மேலும், இதனுடன் இரண்டு டம்ளர் தேங்காய் பால், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு விசில் விடவும்.

இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post