கோதுமை ரொட்டி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • சீரகம்
  • உப்பு
  • பெருங்காயத்தூள்
  • எண்ணெய்

செய்முறை

பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து இளக்கமாக பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.

பின், வாழை இலையில் சிறிதளவு மாவை எடுத்து வைத்து தட்டி தோசை கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post