தேவையான பொருட்கள்
- ரவை
- மைதா
- சர்க்கரை
- நெய்
- எண்ணெய்
- ஃப்ரூட் ஜாம்
செய்முறை
முதலில், கடாயில் ஒரு கப் ரவை, 1/4 கப் மைதா, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், அதே கடாயில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், வறுத்து வைத்துள்ள ரவை, ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர், இதனுடன், ஐந்து ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து இறுகி வரும் வரை கலந்து விடவும்.
தயார் செய்து வைத்துள்ள ரவையை ஒரு வட்டமான பாத்திரத்தில் சேர்த்து ஆறிய பின், எடுத்து அதன் மேல் ஃப்ரூட் ஜாம் தடவி, தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
