கொள்ளு புளி ரசம்

தேவையான பொருட்கள்

  • கொள்ளு பருப்பு
  • புளி
  • தக்காளி
  • சீரகம்
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள் தூள்
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • தேங்காய் எண்ணெய்
  • உப்பு

செய்முறை

குக்கரில், 50 கிராம் கொள்ளு பருப்பு, 500 மில்லி தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு தக்காளி சேர்த்து ஒரு விசில் விடவும்.

பின், தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். வடித்து வைத்துள்ள தண்ணீருடன், வேக வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாயை எடுத்து இதனுடன் சேர்க்கவும் மேலும், நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து ஆறிய பின் தட்டிய நான்கு சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும்.

இறுதியாக, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post