பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • தக்காளி
  • புளி
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • சீரகம்
  • மிளகு
  • பூண்டு
  • பச்சை மிளகாய்
  • சின்ன வெங்காயம்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

குக்கரில், 50 கிராம் துவரம் பருப்பு, இரண்டு தக்காளி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 500 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும். இதனுடன், சிறிதளவு புளி சேர்த்து ஆற வைக்கவும்.

பின், நன்கு கரைத்துக் கொள்ளவும்.

10 பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும்.

பின்னர், கரைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீர், சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

Previous Post Next Post