மீன் சில்லி பிரியாணி


தேவையான பொருட்கள்

  • மீன்
  • அரிசி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • பிரியாணி மசாலா பொடி
  • சிக்கன் மசாலா பொடி
  • பட்டை
  • சோம்பு
  • லவங்கம்
  • பிரியாணி இலை
  • பச்சை மிளகாய்
  • ஏலக்காய்
  • எலுமிச்சை சாறு
  • எண்ணெய்
  • புதினா இலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

முட்களை நீக்கி பொடியாக வெட்டிய ஒரு கப் மீனை சில்லியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், ஒரு ஏலக்காய், இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஐந்து பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா இலை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். பின், மூன்று தக்காளி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.

பின், இரண்டு டம்ளர் அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும் மேலும், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு விசில் விடவும்.

பின்னர், பொரித்து வைத்துள்ள மீன் சில்லி சேர்த்து நன்கு கலந்து விட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

Previous Post Next Post