தேவையான பொருட்கள்
- இஞ்சி
- சோள மாவு
- மிளகுத்தூள்
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
1/4 கப் பொடியாக நறுக்கிய இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து இஞ்சி சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், இஞ்சி சாறு, ஒரு டம்ளர் தண்ணீர், இரண்டு ஸ்பூன் தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
