வெங்காய புளி குழம்பு

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம்
  • தேங்காய்
  • புளி
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • சாம்பார் பொடி
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • வெந்தயம்
  • பெருங்காயத்தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய 1/2 கப் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு கப் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, 1/4 கப் தேங்காயை அரைத்து இதனுடன் சேர்க்கவும் மேலும் கொத்தமல்லி இலை மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post