தேவையான பொருட்கள்
- மட்டன்
- கறி மசாலா தூள்
- மட்டன் மசாலா பொடி
- மிளகுத்தூள்
- சீரகத்தூள்
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- உப்பு
- சோள மாவு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், எலும்பை நீக்கிய 100 கிராம் மட்டனை பொடியாக வெட்டி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் சீரகத்தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், நான்கு ஸ்பூன் சோள மாவு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
