தேவையான பொருட்கள்
- பிரட்
- முட்டை
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- சிக்கன் மசாலா பொடி
- மிளகாய் தூள்
- கடலை மாவு
- சோள மாவு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஐந்து பிரட் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பாத்திரத்தில், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் சோள மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின், வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
