மட்டன் உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்

  • மட்டன்
  • கறி மசாலா தூள்
  • மட்டன் மசாலா பொடி
  • மிளகுத்தூள்
  • சீரகப்பொடி
  • தனியா தூள்
  • மஞ்சள் தூள்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • சின்ன வெங்காயம்
  • தேங்காய்
  • சோம்பு
  • பட்டை
  • இஞ்சி-பூண்டு விழுது
  • உப்பு
  • சோள மாவு
  • எண்ணெய்

செய்முறை

எலும்பை நீக்கிய 100 கிராம் மட்டனை பொடியாக வெட்டிக் கொள்ளவும். இதனுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் சீரகத்தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், நான்கு ஸ்பூன் சோள மாவு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, 1/4 கப் சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், இரண்டு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி சேர்த்து வதக்கவும். பின்னர், ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து இதனுடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன், பொரித்து வைத்துள்ள மட்டன் உருண்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post