மரவள்ளிக் கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக் கிழங்கு
  • அரிசி மாவு
  • எள்
  • மிளகாய் தூள்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் மரவள்ளிக் கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.

இதனுடன், 1/2 கப் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் எள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 50 கிராம் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).

பின், முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post