மீன் சூப்

தேவையான பொருட்கள்

  • மீன்
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • சோள மாவு
  • உப்பு
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

தோசை கல்லில், முட்களை நீக்கிய 1/4 கப் மீன் சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதனுடன், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் தண்ணீரில் கரைத்த சோள மாவு, தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள மீன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post