முட்டை சில்லி சூப்

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மிளகுத்தூள்
  • கறி மசாலா தூள்
  • தனியா தூள்
  • சீரகத்தூள்
  • சோள மாவு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

இரண்டு முட்டையை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்(மஞ்சள் முட்டையை நீக்கி விடவும்).

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், தயார் செய்து வைத்துள்ள முட்டை, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து ஃப்ரை செய்யவும்.

இதனுடன், ஒரு கப் தண்ணீர், இரண்டு ஸ்பூன் தண்ணீரில் கரைத்த சோள மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post