தேவையான பொருட்கள்
- பால்
- சுக்கு பொடி
- மிளகுத்தூள்
- ஏலக்காய் பொடி
- சர்க்கரை
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் பால், ஒரு ஸ்பூன் சுக்கு பொடி, 1/4 ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பால் கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கலந்து விடவும்.
பின், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டு வடிகட்டி கொள்ளவும்.
