கருப்பட்டி தேங்காய் பால்


தேவையான பொருட்கள் 

  • தேங்காய் 
  • கருப்பட்டி 
  • ஏலக்காய் 


செய்முறை 

முதலில், பாத்திரத்தில், 1/2 கப் பொடியாக்கிய கருப்பட்டி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

இரண்டு கப் துருவிய தேங்காய், இரண்டு ஏலக்காய், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

அடி கனமான பாத்திரத்தில், தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பால், ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டம்ளர் காய்ச்சிய கருப்பட்டி சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

Previous Post Next Post