தேவையான பொருட்கள்
- கருப்பு சுண்டல்
- பச்சைப் பயிறு
- கொள்ளு பருப்பு
- தட்டைப்பயிறு
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
கருப்பு சுண்டல், தட்டைப்பயிறு, பச்சைப் பயிறு, கொள்ளு பருப்பு (நான்கும் சேர்த்து ஒரு கப்) 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில், ஊற வைத்துள்ள பயிறு, நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும்.
பின், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
