அரிசி மாவு அடை தோசை

தேவையான பொருட்கள்

  • தோசை மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • பாசிப்பருப்பு
  • சீரகம்
  • கேரட்
  • இட்லி பொடி
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின், 1/4 கப் துருவிய கேரட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். ஆறிய பின், இதனுடன் ஒரு கப் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து இட்லி பொடி தூவி விட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post