பருப்பு கீரை தோசை

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு
  • இட்லி அரிசி
  • உளுந்தம் பருப்பு
  • கீரை
  • சீரகம்
  • காய்ந்த மிளகாய்
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

1/2 கப் கடலைப்பருப்பு, 1/2 கப் இட்லி அரிசி, 1/4 கப்-க்கும் குறைவாக உளுந்தம் பருப்பு சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் ஒரு கப் கீரை, ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு நான்கு மணி நேரம் வைக்கவும்.

பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post