தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- கீரை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- சீரகம்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
ஆறிய பின், இதனை ஒரு கப் தோசை மாவுடன் சேர்த்து மேலும் தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இறுதியாக, தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
